தன்னைவிட வயதில் மூத்த மஞ்சு வாரியருடன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்திலேயே பல அடிப்படைகளை உடைத்த தனுஷ் புரமோஷனிலும் கலக்கியிருக்கிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, யோகி பாபு, கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் நடித்துள்ள படம் அசுரன். வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் ரிலீசுக்காகவும் டிக்கெட் முன்பதிவிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வருவதற்காக முதலில் திட்டமிடப்பட்டு அக்டோபர் முதல் வாரத்திலேயே இப்போது படத்தை வெளியிடுகிறார்கள்.
வயதைக் குறைத்து நடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் அசுரன் படத்தில் 40 வயது தந்தையாக தனுஷ் நடித்துள்ளார். தன்னைவிட வயதில் மூத்த மஞ்சு வாரியருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படி படத்திலேயே பல அடிப்படைகளை உடைத்த தனுஷ் புரமோஷனிலும் கலக்கியிருக்கிறார். 1980-கள், 90-களில் படத்தின் புரமோஷனுக்காக பயன்படுத்தப்பட்ட சுவரோவியத்தை மீண்டும் அசுரனுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சமீபத்தில் பேனர் மேலே விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் இழப்பிற்குப் பிறகு நடிகர்கள் பலர் பேனர்கள், கட் அவுட்களை தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் போஸ்டர்களுக்குப் பதிலாக அசுரன் படக்குழுவினர் சுவரோவியத்தை புரமோஷனுக்காக கையில் எடுத்துள்ளனர். இந்த முயற்சியை ரசிகர்களும் பாராட்டியுள்ளனர். மற்ற நடிகர்களும் இதே முயற்சியைக் கையில் எடுத்தால் பேனர், போஸ்டர், கட்அவுட் கலாச்சாரம் ஒழிந்து ஓவியக் கலைஞர்களுக்கு வாழ்வு கிடைக்கும்.
