हिंदीEnglishதமிழ்മലയാളം
அயோதியில் ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ள ஐந்து முக்கிய அம்சங்கள்.
பல நாட்களாக நடந்துவந்த ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதன்படி சர்ச்சைக்குரிய இடம் ராம லீலா குழுவினருக்கே உரியது என்றும் அங்கு கோவில் கட்டுவதற்கான அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின் முக்கியமான ஐந்து அம்சங்கள்:
- தீர்ப்பு வெளியான மூன்று மாதத்துக்குள் மத்திய அரசு சர்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுமானத்தை நிர்வாகிக்கும் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்.
- சுன்னி வஃக்பு வாரியத்துக்கு அந்த அமைப்பு விரும்பும் இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்க வேண்டும், அதற்காக உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்துக்கு அளித்துள்ள அறிக்கையில் சர்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்டுள்ள மசூதிக்கு கீழே இருந்த கட்டுமானம், இஸ்லாமிய கட்டிடக் கலையின்படி இல்லை எனத் தெரிவித்துள்ளது.
- நிர்மோஹி அகாரா சர்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- மசூதியின் வெளிப்புறத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், முஸ்லிம்கள் அந்த நிலத்துக்கான உரிமையை தங்களுடையது என நிரூபிக்கவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் சர்சைக்குரிய இடத்தில் இருந்து வந்த பாபர் மசூதி 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது தவறு என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Story