கரோனா வைரஸ்:அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்! புகைப்படத்துடன் ட்வீட்!
சமூக வலைதளங்களில் பலரும் அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கே என கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவர் ட்வீட் செய்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் ஒன்றான ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். அதோடு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜயபாஸ்கர், “இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான பிரத்யேக வார்டை பார்வையிட்டேன். அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டேன். நோயாளிகளுக்கு புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சீக்கிரம் குணப்படுத்த உதவும்.” என எழுதியுள்ளார். இந்த ட்வீடோடு சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Visited the #COVID19 exclusive hospital at #RGGH. Inspected the food quality provided to d patients. The patients are provided with protein rich diet to improve the immune health which will help in faster recovery from illness. #TN_Together_AgainstCorona @MoHFW_INDIA #TNHealth pic.twitter.com/gYCr7PlXAV
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 1, 2020

Related Stories
தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா உறுதி! பாதிப்பு எண்ணிக்கை எகிறியது! முழு விவரம்!
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி! நோய் அறிகுறிகளுடன் 295 பேர் மருத்துவமனையில் அனுமதி!
மதுரையில் கரோனா பரிசோதனை மையம்
கரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு! மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்!