ரஜினியின் அரசியல் வருகையை எதிரொலிக்கும் தர்பார் `சும்மா கிழி..’ பாடல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
அனிருத்- எஸ்பிபி கூட்டணியில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பெரும்பாலான படங்களில் ரஜினிக்கு ஓப்பனிங் பாடலை எஸ்பிபி பாடி வருவது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள தர்பார் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ரஜினியின் 2.0 படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தர்பார் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஏற்கனவே நவம்பர் 27ம் தேதி 'சும்மா கிழி' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது என்ற அறிவிப்பையும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருந்தார்.
" Karuppu thol'oda singam vanttaru scene'oda! " ????????
— Lyca Productions (@LycaProductions) November 27, 2019
Here's #ChummaKizhi 1st single from #DARBAR ???? https://t.co/CjlC9YsEyh#Thalaivar @rajinikanth @ARMurugadoss @anirudhofficial #SPB sir @Lyricist_Vivek #DarbarSingle #DarbarPongal #DarbarThiruvizha
அதன்படி, தற்போது தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. சும்மா கிழி என்று தொடங்கும் இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியுள்ளார். அனிருத்- எஸ்பிபி கூட்டணியில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
இந்த பாடலின் தொடக்கமே `நான் தாண்டா இனிமேலு..’ என்று தொடங்குகிறது. ரஜினியின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த வேளையில் இந்த பாடல் அவர்களுக்கு ஒரு பூஸ்ட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாடலின் இடையில், `உழைப்பை மதிச்சு கால் எடுத்து வச்சாலே..இளமை முழுசா உன் கூடவே ஒட்டும் பார்..’ என்று வருகிறது. ஏற்கெனவே ரஜினிக்கு வயசாகி விட்டது. இனி அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்போருக்கு பதில் சொல்லும் விதமாக இந்த வரிகள் அமைந்துள்ளது.