ஒரே பந்தில் 9 ரன் எடுப்பவர்தான் எடப்பாடியார் - சட்டப்பேரவையில் சிக்ஸர் அடித்த விஜயபாஸ்கர்
தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் பின்னர் மீண்டும் 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒரே பந்தில் 9 ரன் எடுத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் பின்னர் மீண்டும் 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க பட உள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஒரு பந்தில் ஓரு ரன் அடிக்கலாம், சிக்ஸர் அடிக்கலாம். ஆனால் 9 ரன் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி மட்டும் தான். தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றதாக அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.
