வெந்தயம் வைட்டமின் கே மற்றும் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் கருவளையங்களை எதிர்த்துப் போராட உங்களுக்கு உதவக்கூடும்.
வெந்தயம் உங்கள் தலைமுடி, தோல் மற்றும் செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். உண்மையில், வெந்தயம் நம் கையில் இருக்கும் பணத்தை காலி செய்யாமல், நமது அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
1. ஸ்க்ரப்பர் மற்றும் மாய்ஸ்சுரைஸராக பயன்படும் வெந்தயம்
வெந்தயத்தை ஒரு ஸ்க்ரப்பராக பயன்படுத்த, அவற்றை ஓர் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் பேஸ்ட்டை போல அரைத்துக் கொள்ளவும். உங்கள் முகத்தில் பேஸ்டை மெதுவாகத் தேய்த்து 20 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்பு கழுவவும்.
உங்களுக்கு வறண்ட சருமம் என்றால், மேலும் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க விரும்பினால், இந்த செயல் முறையை பின்பற்றவும். சிறிது தயிர் மற்றும் ஆர்கானிக் தேனை எடுத்துக் கொள்ளவும். 2 பாகங்கள் ஊறவைத்த வெந்தயத்தை, அதன் 1 பகுதி தயிர் மற்றும் ½ பகுதி தேன் சேர்த்துக் கலக்கவும். கலவையை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். 20 நிமிடங்கள் விட்டுவிட்டு, கெமிக்கல் இல்லாத ஃபேஸ் வாஷ் மூலம் கழுவ வேண்டும்.
2. பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்வுக்கு
ஒரு கப் ஊறவைத்த வெந்தயம், 1 தேக்கரண்டி ஆர்கானி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் தேவைப்படும் .
இந்த அனைத்து பொருட்களையும் கலந்து, ஹேர் மாஸ்க் போலத் தடவவும். உங்கள் உச்சந்தலையில் தொடங்கி முடியின் நுனிப்பகுதியை நோக்கிச் செல்லுங்கள். இதை 30 நிமிடங்கள் வைத்து, ரசாயனமில்லாத ஷாம்பூவுடன் கழுவ வேண்டும்.
3. மாதவிடாய் காலங்களில் வரும் வலிக்கு பை பை
வெந்தய விதைகளில் உள்ள லைசின் மற்றும் டிரிப்டோபன் நிறைந்த புரதங்கள் கால வலியிலிருந்து தப்பிக்க உதவுகின்றன. 2-3 தேக்கரண்டி வெந்தயத்தை சுமார் 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து , விதைகளை நீக்கி தண்ணீரை மட்டும் குடிக்கவும். (நீங்கள் ஊறவைத்த விதைகளை வீட்டு ஹேர் ஸ்பாவுக்குப் பயன்படுத்தலாம்!)
4. கருவளையம் இனி இல்லை
வெந்தயம் வைட்டமின் கே மற்றும் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் கருவளையங்களை எதிர்த்துப் போராட உங்களுக்கு உதவக்கூடும். விதைகளை ஒரே இரவில் ஊறவைத்து, மறுநாள் காய்ச்சாத பாலுடன் கலக்கவும். முகத்தைக் கழுவிய பிறகு, கருவளையம் மீது பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். அதை உலரவிட்டு மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் போதுமானது.
5. செரிமான பிரச்னைக்கு வெந்தயம் :
வெந்தயம் உங்கள் செரிமானம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த அறியப்படுகிறது. வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து, அதன் மீது பருத்தி துணியால் மூடி வைக்கவும். மறுநாள் அந்த தண்ணீரை குடிக்கவும். வாரத்திற்கு இரண்டு முறையாவது செய்யவும்.

Related Stories
'மூட் ஸ்விங்ஸ்' உண்டாக்கும் 4 முக்கிய காரணங்கள்
தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க உதவும் 8 உணவுகள்…. #Breastfeeding week
டைப்1 , டைப் 2 மற்றும் கர்ப்பகால சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஓக்ரா வாட்டர்
மலசிக்கலை தீர்ப்பதற்கு எளிய வழிகள்