விஜய பிரபாகரனின் ’என் உயிர் தோழா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
“என் உயிர் தோழா” ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பாடி நடித்துள்ள “என் உயிர் தோழா” ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
”என் உயிர் தோழா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலை விஜய பிரபாகரன் இளைஞர்களுக்காகப் பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக கேப்டன் விஜய்காந்த் இந்த ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். "தமிழரை என்னுயிர் என்பேன் நான்... தமிழ் இளைஞரை எல்லாம் தன்னுயிர்த்தோழன் என்கிறார் விஜயபிரபாகரன்..! இதோ உங்களின் என் உயிர்த் தோழா! Firstlook Poster” என்று பதிவிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 5.40 மணிக்கு வெளியிடப்பட்டது.
"தமிழரை என்னுயிர் என்பேன் நான்..."
— Vijayakant (@iVijayakant) December 2, 2020
தமிழ்இளைஞரை எல்லாம் தன்னுயிர்த்தோழன் என்கிறார் விஜயபிரபாகரன்..!
இதோ உங்களின்
என் உயிர்த் தோழா! Firstlook Poster#vijayaprabhakaran | #independentmusic | #Enuyirthozha pic.twitter.com/xLlk9Dxeus
சுயாதீன ஆல்பம் என்று குறிப்பிடப்படும் இந்த பாடலுக்கு ஜெஃப்ரி ஜோனாதன் இசையமைத்துள்ளார். புரட்சி நம்பி பாடல் வரிகளை எழுதியுள்ளார். யுவன் செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்ட பாலாஜி படதொகுப்பு செய்துள்ளார்.விஜய பிரபாகரன் நடனமும், பாடலையும் பாடியுள்ளார்.
