हिंदीEnglishதமிழ்മലയാളം
சூழலியல்
கோவை, நீலகிரி, தேனி மாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.
கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேலடுக்கில் ஏற்பட்ட காற்றின் ஒன்றிணைப்பால் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories
கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!