இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மீரா மிதுன், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போடப்பட்ட ஒப்பந்த தொகையில், எனக்கு ஒரு ரூபாய் கூட இன்னும் விஜய் டிவி கொடுக்கவில்லை. எனக்கான தொகையை கேட்டால் சரியான பதிலும் இல்லை. அவர்கள் பணம் தரவில்லை என்றால் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனை மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் வாழமுடியாத அளவுக்கு எனக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. நான் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். ஆனால் எந்த கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன் என இப்போது கூற விரும்பவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.