இந்த 7 குணங்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ரொம்ப நல்லவர்.. ஏமாத்திடுவாங்க உஷார்!
வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல, ‘’எல்லா நேரத்துலையும் இப்படியே இருக்காதப்பா.. அப்புறம் உன்னை ஏமாளின்னு நினைச்சு ஏமாத்திடுவாங்க’ என்று கூறுவார். அது உங்களுக்குப் பலித்துவிடும்.
இந்த 9 குணங்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ரொம்ப நல்லவர்.. உஷார்!
நல்லவனா இருக்கலாம்.. ஆனால் ரொம்ப நல்லவனா இருக்கக்கூடாது.. என்று நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அடிக்கடி கூறுவதை நாம் கேட்டுள்ளோம். நல்லவனுக்கும் ரொம்ப நல்லவனுக்கும் என்ன வித்தியாசம்? எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறவன் நல்லவன். நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை சுற்றியிருப்பவர்கள் எல்லாரும் நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவன் ரொம்ப நல்லவன்.
நீங்க நல்லவனா ? ரொம்ப நல்லவனா? இதை படிச்சு புரிஞ்சு தெரிஞ்சிக்கோங்க.
1. அடுத்தவர்களை உங்கள் எல்லைக்குள் எளிதாக அனுமதித்து விடுவீர்கள்.
'என்னோட எல்லைக்குள்ள வந்து தேவை இல்லாமல் வாலாட்டாதே’ என்று சொல்லத் தயங்குபவர்கள். உங்கள் நல்ல மனதை புரிந்துகொண்டு உங்களிடமே வம்பு இழுப்பது, காரியம் சாதித்துக்கொள்வது போன்ற விஷயங்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். உதாரணமாக உங்கள் முன்னால் காதலி, குற்ற உணர்வு இல்லாமல் உங்களிடம் வந்து யதார்த்தமாகப் பேசுவது, உங்களிடமே வேலை வாங்குவது போன்ற வேலைகளை எளிதாகச் செய்துவிடுவார்.
2. உங்கள் கருத்துக்களைச் சொல்லத் தயங்குவீர்கள்.
நமக்கு எதுக்கு வம்பு, இருக்கிற இடம் தெரியாமல் இருந்துப்போம் என்று நினைத்துக்கொண்டே இருப்பவர்கள். உண்மையில் உங்கள் அடையாளம் யாருக்குமே தெரியாமல் போய்விடும். குடும்பங்களிலும், அலுவலகங்களிலும் உங்கள் கருத்தை நீங்கள் பதிவு செய்தாலும் பிறர் மனம் நோகக்கூடாது என்பதற்காக அவர்களது கருத்து தவறாக இருந்தாலும் அமைதியாக இருந்துவிடுவீர்கள்.
3. உதவி செய்வதில் கர்ணனுக்கு அண்ணன் நீங்கள்.
உனக்கு இரண்டு கிட்னி இருக்கே, எனக்கு ஒன்று தருவியா என்றால் நீங்கள் முதலில் மாட்டேன் என்று கூறுவீர்கள். ஆனால் கேட்பவரின் முகம் மாறினால் பரவாயில்லை வெச்சுக்கோ என்று அவருக்கு ‘கேப்' பிடித்து வழியனுப்பிவிட்டு நீங்கள் நடந்து செல்வீர்கள்.
4. பிறரை நேசிக்கும் நேசமணி.
எனக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை உனக்கு இருக்கட்டும். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நீங்கள் புன்னகை தேசம் தருண் போன்றவர்கள். சுயநல பூமியில் முதலில் உங்களை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.
5. அந்த பலி ஆடு நீங்களே.
நீங்கள் சிறிய தவறு செய்தாலும் , அதற்குப் பலமுறை மன்னிப்பு கேட்கும் சுபாவம் உள்ளவர்கள். இந்த குணத்தைப் பல நாட்கள் பார்த்தவர்கள், சிறு தவறு செய்தாலும், பிறர் தவறு செய்தாலும் உங்களை பலி ஆடாக மாற்றிவிடுவார்கள். நீங்களும் அந்த பழியை விருது வாங்குவது போல மனப்பூர்வமாக வாங்கிக்கொள்வீர்கள்.
6. உன் நட்பு பெருசு என்று எண்ணும் சிறந்த நண்பன்.
உங்கள் நண்பர் அமேரிக்க அதிபர் தோனி என்று கூறினால் இல்லை அது ட்ரம்ப் என்று உங்கள் நண்பரிடமும் தைரியமாகக் குறை கூற மறுப்பவர். எங்கே உங்கள் உறவு இந்த ஒற்றை வரியால் பாதித்துவிடுமோ என்று பயப்படுபவர்களே, உலகமே திரண்டு வந்தாலும் உண்மையை உரக்கச் சொல்லுங்கள்.
7. கோபத்தை வெளிக்காட்டுவது தேசிய குற்றமா?
உங்களது உணர்வுகளை வெளிக்காட்டத் தயங்குபவர்கள். அவமானப் படுத்தினாலும் அமைதியாக அங்கே இருந்துவிட்டு தனிமையில் அழுபவர்கள் அல்லது அனைத்தும் சரியாகிவிடும் என்று உணர்வுகளைத் தியாகம் செய்து விடுவீர்கள். இது போல உணர்வுகளைக் கட்டுப்படுத்தினால் உங்கள் உடல் நோயாக வெளிப்படுத்தும்.
வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல, “எல்லா நேரத்துலையும் இப்படியே இருக்காதப்பா.. அப்புறம் உன்னை ஏமாளின்னு நினைச்சு ஏமாத்திடுவாங்க” என்று கூறுவார். அது உங்களுக்குப் பலித்துவிடும்.
