காவேரி கூக்குரல் - ஒரு விசாரணை என்ற கருத்தரங்கத்தை இந்திய சுற்றுச்சூழல் நீதிக்கான கூட்டமைப்பும், ஏசியன் இதழியல் கல்லூரியும் இணைந்து இன்று நடத்தியது. இந்த கருத்தரங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், துறை நிபுணர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் `காவேரி கூக்குரல்’ திட்டத்தால் காவேரி ஆற்றை ஒருபோதும் மீட்க முடியாது என்று கூறினார்.