’எம்ஆதார்' செயலியை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றி புதிய பதிப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமி உள்ளிட்ட 13 மொழிகளில் முந்தைய பதிப்புகளை நீக்கிவிட்டு புதிய பதிப்பை உடனடியாக பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.