हिंदीEnglishதமிழ்മലയാളം
உடல்நலம்
தலை வலி, சைனஸ், தோள்பட்டை வலியை நீக்கும் “மகா சிரசு முத்திரை”
தலை பகுதிகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளிப்பதால், முடி உதிர்வு, மன அழுத்தம், மந்தத்தன்மை ஆகியவை குறைகின்றது. முகம் பொலிவடைகின்றது.
நம் உடலில் உள்ள சக்திகளைத் தூண்டுவதோடு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டினை சீராக வைத்திருக்க உதவுவதே முத்திரை.
மகா சிரசு முத்திரை
சிரசாசனம் செய்வதால் அடையும் அனைத்து பயன்களையும் ’மகா சிரசு’ முத்திரை செய்வதால் அடையலாம்.
செய்முறை
- கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலின் நுனிபகுதிகள் ஒன்றோடு ஒன்றாக தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
- கட்டைவிரலின் அடிப்பகுதியை மோதிர விரலின் நுனிபகுதியால் மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
- சுண்டு விரல் படத்தில் காட்டியதைப் போல நேராக இருக்க வேண்டும்.
- இம்முத்திரையை, இரண்டு கைகளிலும் பிடிக்க வேண்டும். உள்ளங்கை வானத்தைப் பார்த்ததைப் போல இருக்க வேண்டும்.
தரையில் (விரிப்பின் மீது) அல்லது நாற்காலியில் (கால்கள் தரையில் ஊன்றி இருக்க வேண்டும்) அமர்ந்தோ இதைச் செய்யலாம்.
பலன்கள்
- தீவிர சைனஸ் உள்ளவர்கள் தினமும் 20 நிமிடங்கள் வரையில் செய்யலாம்.
- தலை பகுதிகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளிப்பதால், முடி உதிர்வு, மன அழுத்தம், மந்தத்தன்மை ஆகியவை குறைகின்றது. முகம் பொலிவடைகின்றது.
- பதற்றத்தால் உண்டாகும் தலை வலி, நீர் கோர்ப்பதால் வரும் தலை பாரம், நெற்றி பொட்டில் ஏற்படும் வலி , மூக்கடைப்பு, சளி தொல்லை ஆகியவற்றுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
உடலின் சக்திகளை சமப்படுத்துகிறது. கழுத்து எலும்பில் உள்ள சவ்வு தேய்வதாலும், நீண்ட நேரம் கணினி முன்பு அமர்வதாலும், இரு சக்கிரம் ஓட்டுவதாலும் ஏற்படும் கழுத்து வலி, தோள் பட்டை வலி சரியாகும்.
குறிப்பு
காலை மாலை என இரு வேளையும் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து இந்த முத்திரையை செய்யலாம்.
