எதைப் பார்த்தாலும் மிகச் சிறியதாக தெரியும் நோய்; 64 வயதில் அவதிக்குள்ளான நபர்
இவரது துணிகள் அனைத்தும் சிறிதாக காட்சியளித்துள்ளது. அப்போது இவரது மனைவியுடன் ஏன் அனைத்தையும் சூடான நீரில் துவைத்தாய், பார் எல்லாம் சுருங்கிவிட்டது எனப் பலமுறை சண்டையிட்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி ஒருவர் பக்கவாதம் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இந்தப் பக்கவாதம் ஏற்படுவதற்கு 11 நாட்களுக்கு முன்னரே இவர் தனது பார்வை குறைந்து வருவதாகும் கூறியுள்ளார். இதன் பின்னர் இவருக்கு அனைத்து பொருள்களுமே சிறிய அளவில் தெரிந்துள்ளது.
டிசம்பர் 28ஆம் தேதி இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இவரது மூளையின் பின்பகுதியில் வலது பக்க நரம்புகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் பார்க்கும் அனைத்துப் பொருள்களும் மூன்றில் ஒரு பங்கு சிறிதாக தெரிந்துள்ளது. இவரையே கண்ணாடியில் பார்க்கும் போது ஒரு மினியேச்சர் போன்று தேன்றியுள்ளது.
இந்தப் பாதிப்பையடுத்து இவர் கடையில் துணி வாங்கும் போது கூட மிகவும் பெரிய அளவில் வாங்க ஆரம்பித்துள்ளார். அதாவது இதற்கு முன்பு இவர் பார்வைக்கு தெரிந்த அளவிலான துணியை எடுத்துள்ளார். பார்வைக் குறைப்பாட்டுக்கு பின்னர் இவரிடம் உள்ள துணிகள் ஏதும் தனக்கு இப்போது பொருந்தாது, அனைத்தும் எப்படி சிறிதாகியுள்ளது என்றெல்லாம் இவர் குழம்பியுள்ளார். இதனால் பல முறை இவரது மனைவியுடன் ஏன் அனைத்தையும் சூடான நீரில் துவைத்தாய், பார் எல்லாம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பார்க்கும் சாலைகள், கட்டிடங்கள், நபர்கள் என அனைவரும் சிறிதாக இவருக்கு தெரிந்துள்ளன. ஆனால், அதிர்ஷ்டவசமாக இவருக்கு பார்வையில் நிறக்குறைபாடு ஏற்படவில்லை. அதேபோல் இவர் நல்ல முறையில் வாகனங்களையும் ஓட்டுகிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படியே நாட்கள் செல்லச் செல்ல வலது மூளையில் ஏற்பட்ட பாதிப்பு இவரது இடது கண் பார்வையும் பாதித்துள்ளது. புத்தகங்கள் வாசிக்கும் போது இடதுபக்கம் உள்ள சில வார்த்தைகளை இவரால் பார்க்கமுடியவில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
credit: tandofline.com
பக்கவாதம் ஏற்பட்ட போது இவரது மூளையின் பின்புறத்தில் வலது பக்கம் உள்ள ரத்தத் திசுக்கள் பாதிப்படைந்துள்ளது. இதனால் இவர் பார்வைக்கும் அனைத்துப் பொருள்களுமே சிறிதாக அதாவது மொத்த அளவில் 70 சதவீதம் தெரிந்துள்ளது. இதுவே நாட்களாக பொருள்களின் வடிவங்களும் வித்தியாசமாக தெரிந்துள்ளது. இதனை மருத்துவர்கள் உறுத்தோற்றப் பாதிப்பு எனக் கூறுகின்றனர். இந்தப் பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு உலகம் மிகவும் சிறியதாகவே தெரியும் இது குணமாவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.