”டிவிட்டர் வரவும்” பொங்கல் பரிசு காத்திருக்கிறது - மாஸ்டர் அப்டேட்
பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியான நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாஸ்டர் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று அப்படத்தின் கதை ஆசிரியர் ரத்ன குமார் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சென்னை, டெல்லி, கர்நாடகா என மூன்று இடங்களில் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் 4 ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய்-விஜய்சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியான நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்னும் படப்பிடிப்பே முடிவடையாத நிலையில் படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
We are glad to announce the massive distributors List of #Master ????#MasterHasArrived #MasterUpdate #MasterBusinessUpdate pic.twitter.com/vS6kVZmkEv
— XB Film Creators (@XBFilmCreators) January 12, 2020
தற்போது மாஸ்டர் படத்தின் கதாசிரியர் ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 'Twitter வரவும். பொங்கல் பரிசு காத்திருக்கிறது’ என்று பதிவிட்டிருந்தார்.

இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாகினார். ஆனால் சில நிமிடங்களிலே அந்த பதிவை அவர் டெலிட் செய்தார்.
முன்னதாக ஜனவரி 16 ஆம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தில் 2 வது போஸ்டர் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்தது. ரத்ன குமாரின் இந்த பதிவு அதை உறுதிபடுத்தியது. ஆனால் அந்த பதிவை அவர் நீக்கியதும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

Related Stories
வெறியேற்றிய விஜய்யின் `வெறித்தனம்’
மாஸ்டர் ஷூட் ஓவர் ஆடியோ ரிலீஸ் எப்ப தெரியுமா? - அடுத்த மாஸ்டர் பிளான்
ஏ.ஆர்.ரகுமான் வாய்ஸ்ல வெறித்தனம் பாடல் கேட்டிருக்கீங்களா? - வீடியோ இதோ!
மாஸ்டர் படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் - யார் வெளியிடுகிறார்கள்? அதிர்ச்சியில் படக்குழு