மலையாளத்திற்கு மட்டும் சம்பளத்தைக் குறைத்த நயன்தாரா!
நீண்ட நாட்களாக மலையாளப் படங்களில் தலைகாட்டாத நயன்தாரா லவ் டிராமா ஆக்சன் படத்தின் கதையைக் கேட்டதும் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.
தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, நயன்தாரா, அஜு வர்கீஸ் நடித்திருக்கும் படம் லவ் டிராமா ஆக்சன். 2018இல் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. நடிகரும் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசனின் பேரனுமான தியான் ஸ்ரீனிவாசன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நடிகர் அஜு வர்கீஸ் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார். முதன்முறையாக நிவின் பாலியும் , நயன்தாராவும் இணைந்து நடிப்பதால் மலையாள சினிமாவில் இப்படம் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது.
தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் நயன்தாரா, பிறமொழிப் படங்களை மிகவும் குறைவாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக மலையாளப் படங்களில் தலைகாட்டாத நயன்தாரா, லவ் டிராமா ஆக்சன் படத்தின் கதையைக் கேட்டதும் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ.2 - ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா, அவரது சொந்த மொழியில் நடிக்க சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மலையாளப் படங்கள் குறைவான பட்ஜெட்டில்தான் எடுக்கப்படுகின்றன. இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே ஒன்பது கோடி ரூபாய்தான். லவ் டிராமா ஆக்சன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் டிரெய்லர் வெளியாகிறது. வரும் ஓணம் பண்டிகை அன்று லவ் டிராமா ஆக்சன் படம் வெளியாக இருக்கிறது.

Related Stories
தேர்தலா அது கிடக்கட்டும்- முருகதாஸ் படத்தில் பிஸியாகும் சூப்பர்ஸ்டார்
இரட்டை வேடத்தில் நயன்தாராவின் ஐரா
சம்பளத்தைக் குறைத்து, சித்தார்த்துக்கு ஜோடியாகும் நயன்தாரா!
அடம்பிடிக்கும் நயன்தாரா, கடுப்பில் தயாரிப்பாளர்கள்