हिंदीEnglishதமிழ்മലയാളം
அலசல்
அடிப்படை கற்றலில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கியிருக்கிறார்களா?
2025ம் ஆண்டிற்குள் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் உள்ள மாணவர்கள், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அடையவேண்டும் என்பது தேசிய கல்விக்கொள்கையின் ஒரு குறிக்கோளாகும்.
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது என்கிறார் மதி அமைப்பின் அடிப்படை கற்றல் மேம்பாட்டுத் திட்டத்தை வழிநடத்தும் ஸ்ரீவத்சன் ராமசாமி. “படித்தல், எழுதுதல் மற்றும் எண்களின் அடிப்படை செயல்பாடுகள் செய்யும் திறன், ஐந்தாம் வகுப்புக்குச் செல்வதற்கு முன்பே ஒரு மாணவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.”
