இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட் டிவி! விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?
பிளப்கார்ட் ஆன்லைன் தளத்தில் ஜூன் 4-ம் தேதி முதல் இந்த டிவி விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா நிறுவனம் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய உள்ளது. 43இன்ச் கொண்ட இந்த டிவி ஜூன் 4-ம் தேதி பிளிப் கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.
நோக்கியா ஸ்மார்ட்டிவி
நோக்கியா இரண்டாவது ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த மார்ச் மாதம் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கான டீசர் வெளியான நிலையில், கரோனா லாக்டவுன் காரணமாக விற்பனை செய்வதில் குழப்பம் நீடித்து வந்தது.

இப்போது லாக்டவுன் தளர்வுகள் அமலில் உள்ளதால் ஆன்லைனில் விற்பனையை தொடங்க உள்ளது. 43 இன்ச் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 31,000 – 34,000 ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நோக்கியா 55 இன்ச் டிவியை 41,999 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இப்போது அறிமுகம் ஆக உள்ள ஸ்மார்ட்டிவியில் பல அம்சங்கள் 55 இன்ச் டிவியில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அண்ட்ராய்ட் 9 பையில் இயங்கும் இந்த டிவியில் பிளே ஸ்டோர்,அமேசான் பிரைம், டிஸ்னி+, ஹாட் ஸ்டார் மற்றும் யூடியூப் வசதிகள் உள்ளன. இதில் 12 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சவுண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
