ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டு வழக்கில் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளார். ஏற்கனவே அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் வழங்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,``பொருளாதார குற்ற வழக்கில் ஒருவருக்கு ஜாமின் வழங்கினால், அது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். சட்டவிரோத பணபரிமாற்ற புகாரில் சிதம்பரத்துக்கு எதிரான வலிமையான ஆதாரங்கள் உள்ளன. அவர் முக்கிய பங்காற்றியதற்கான ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கமுடியாது” என உத்தரவிட்டிருந்தார்.