இதெல்லாம் இப்படிதான் இருக்கனும்னு ஊரு முடிவு பண்ணுது: பாவக் கதைகள் டிரைலர்!
மரியாதை, காதல், தண்டனை, பெருமை என நான்கு கதைகளின் ஒரு உணர்ச்சி
‘பாவக் கதைகள்’ அந்தாலஜியின் டிரைலரை இன்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் பாவக் கதைகள். ஆர்.எஸ்.வி.பி மூவிஸ் நிறுவனம் மற்றும் ப்ளையிங் யூனிகார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இயக்குனர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கெளதம் வாசு தேவ் மேனன், விக்னேஷ் சிவன் ஆகிய நான்கு பேரும் இந்த ஆந்தாலஜியை இயக்கியுள்ளனர்.
Honour. Love. Sin. Pride.
— Netflix India (@NetflixIndia) December 3, 2020
4 stories, 1 rollercoaster of emotions. #PaavaKadhaigal @menongautham @SimranbaggaOffc @AadhityaBaaskar #SudhaKongara @BhavaniSre @kalidas700 @imKBRshanthnu @VetriMaaran @Sai_Pallavi92 @prakashraaj @VigneshShivn @yoursanjali @kalkikanmani pic.twitter.com/bWTgCOfq1M
அஞ்சலி, சாய் பல்லவி, சிம்ரன், கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பிரகாஷ் ராஜ், பவானி ஶ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மரியாதை, காதல், தண்டனை, பெருமை என நான்கு கதைகளின் ஒரு உணர்ச்சி என குறிப்பிட்டு டிரைலரை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 18ஆம் தேதி இப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
