காங்கிரஸை சேர்ந்த ஹெச்.வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் எம்பியாக வெற்றிபெற்றார். இதனால் நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதியில் எம்எல்ஏ ராதாமணி காலமானர். இதனால் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை இடங்கள் காலியானது. இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.