வெளியானது ’சார்பட்டா’ படத்தின் சில புகைப்படங்கள்!
மகாமுனி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த ஆர்யாவுக்கு சார்பட்டா 30-வது படம்
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’சார்பட்டா’ படத்தின் சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சார்பாட்டா. இந்த படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். 1990களில் வடசென்னையில் நிலவிய குத்துச்சண்டை கலாச்சாரம் பற்றி இப்படம் பேசும் என்று கூறப்படுகிறது.

கடைசியாக இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த ஆர்யாவுக்கு சார்பட்டா 30-வது படம். மேலும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், காளி வெங்கட், கலை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Thanks a million for the overwhelming love #Sarpattaparambarai ????#Grateful
— Arya (@arya_offl) December 3, 2020
Wouldn’t have been possible without all actors workin so dedicatedly Love u all ????@KalaiActor @Actorsanthosh @johnkokken1 @ActorMuthukumar #Pasupathy @officialdushara #johnvijay @kaaliactor ????@K9Studioz pic.twitter.com/GpPGgfdAJV
இந்நிலையில் இப்படத்தின் சில புகைப்படங்களை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ”பெரும் அன்பு கொடுக்கும் மில்லியன்களுக்கு நன்றி. எல்லா நடிகர்களும் வேலை செய்யாமல் இருந்திருக்க முடியாது. எனவே அர்ப்பணிப்புடன் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” என்று பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் ஆர்யா.

நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
