இந்தியாவில் Redmi 9 Prime போன் ஆகஸ்ட் 4-ம் தேதி அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட் போனின் புகைப்படங்கள் ரெட்மியின் ட்விட்டர் பக்கத்திலும், MI.com என்ற இணைய பக்கத்திலும் வெளியாகியுள்ளது.
ரெட்மி 9 ப்ரைம் போன் இந்தியாவில் ஆகஸ்ட் 4-ம் தேதி அறிமுகம் ஆக உள்ளதாக ரெட்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரெட்மி 8 சீரீஸ் வெளியான நிலையில், இந்த ஆண்டு ரெட்மி 9 சீரீஸ் வெளியாகி வருகிறது. ரெட்மி 9 ப்ரைம் டீசர் வெளியாகியுள்ளது.

ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட் போனின் புகைப்படங்கள் ரெட்மியின் ட்விட்டர் பக்கத்திலும், MI.com என்ற இணைய பக்கத்திலும் வெளியாகியுள்ளது. சீனாவில் ரெட்மி 9 வெளியானது. அதையே ப்ரைம் ஆக இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ரெட்மி 9 ப்ரைமில் அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி மற்றும் அதிக பிக்சல்கள் கொண்ட கேமரா இருக்கலாம். சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9 இந்திய மதிப்பில் 8,500 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Time to rack your brains! ????
— Redmi India - #BackToPrime (@RedmiIndia) July 29, 2020
The all-new #RedmiPrime will give you PRIME protection which all of us love. ????
Can you guess the PRIME feature we're talking about here? Tell us in the comments below! #BackToPrime
Get notified: https://t.co/QWNgz4AfAe pic.twitter.com/LuBhG3fIW7
இதனையடுத்து தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ள ப்ரைம் 10 ஆயிரம் ரூபாய்க்குள் தான் விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானதால், இந்த ப்ரைம் போன்கள் தான் அந்த பட்ஜெட் போன்கள் எனவும் கூறப்படுகின்றது.இந்த போன் டைப் சி சார்ஜருடன் வர உள்ளது. வாட்டர் புரூப் வசதி இருப்பது டீசர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 9 ப்ரைம் போனின் கூடுதல் விவரங்கள் ஆகஸ்ட் 4-ம் தேதி தான் வெளியாகும்.
