அயோத்தி வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் தந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதில் வெற்றி கிடைக்கவில்லை. இப்போது தாமதமானாலும் சிறந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் தற்போது அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த மோதலுக்கு நல்ல தீர்வு வேண்டும் என விரும்பினோம். தற்போது, அந்த தீர்வு கிடைத்துள்ளது. எங்களின் விருப்பம் நிறைவேறியுள்ளது. அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை யாருக்கும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருத வேண்டாம். கடந்த காலங்களில் நிகழ்ந்த பிரச்னைகளை மறப்போம். அனைவரும் ஒன்றிணைந்து ராமர் கோவில் கட்டுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.