சாயிஷா செய்த மேங்கோ சீஸ் புட்டிங் - பாக்கவே நல்லா இருக்கே!
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தினம் ஒரு சமையல் குறிப்பு, புதுவகையான உணவு என பல பிரபலங்கள் பதிவிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
கரோனாவின் பாதிப்பு நம் அனைவரையும் வீட்டிற்குள் முடக்கி வைத்து இருந்தாலும் நமக்குள இருக்கும் சமையல் வல்லுனரை வெளியில் தட்டி எடுத்து எடுத்து வந்திருக்கிறது. தினமும் வித்தியாசமாக சமைக்கும் ஆசைகளும், சமைத்ததை அழகாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நோக்கமும் இதற்கு சாட்சி. சமீப காலங்களில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக உணவு சார்ந்த புகைப்படங்கள் சமையல் குறிப்புகள் குறிப்புகளை பார்க்க முடிகிறது. உணவு சார்ந்த பேஜ்களும் குரூப்புகளும் பரபரப்பாக இருக்கின்றன.
சமையல் ஆசை பிரபலங்களையும் கிச்சனுக்குள் இழுத்து வந்திருக்கிறது. பல பிரபலங்கள் அவர்களது வீட்டு கிச்சனுக்குள் சென்று சமையலைத் தொடங்கி இருக்கிறார்கள். சமைத்து முடித்து விட்டு புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுத் தள்ளுகிறார்கள். இந்நிலையில் நடிகையும் நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா அவரது வீட்டு கிச்சனில் செய்த மேங்கோ சீஸ் புட்டிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பார்ப்பதற்கே சாப்பிடத் தூண்டும் இந்த புகைப்படத்தை பார்த்து ரெசிபியும் சேர்த்துப் போட்டால் நன்றாக இருக்குமே என்று ரசிகர்கள் பலர் கேட்டு வருகிறார்கள்.

Related Stories
அடுத்த வாரம் ஆர்யாவிற்கு டும் டும் டும்
மீடியாவிற்கு தனி ரிசப்சன் வைத்த ஆர்யா- சாயிஷா
புத்தம் புது லொகேஷனுக்காக ஜாவா பறந்த 'காப்பான்' படக்குழு
'சூர்யா பேசியது மோடிக்குக் கேட்டிருக்கிறது': ரஜினிகாந்த் ஆதரவு