செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் நாயகன் கார்த்திக்? புதிய ஹீரோ யார்?
செம்பருத்தி சீரியல் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
செம்பருத்தி சீரியலில் இருந்து நாயகன் கார்த்திக் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் வேறொருவர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
செம்பருத்தி சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சன் டிவியின் ஹிட் சீரியலான ரோஜாவுக்கு சவால்விடும் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. லாக்டவுனுக்கு பிறகு பல சேனல்களும் சீரியல் நடிகர்களை மாற்றினர். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள், வெளியூர் நடிகர்கள் என பலரை நீக்கிவிட்டு புதிய நடிகர்களை போட்டனர். இதில் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலையே தூக்கிவிட்டு இப்போது புதிய ஆட்களை கொண்டு சீரியலை வெளியிட்டு வருகிறது. இதேநிலை தான் சன் டிவிக்கும். அழகி சீரியல் எல்லாம் அப்படியே நிறுத்தப்பட்டது. அதோடு கலர்ஸ் தமிழ் எல்லா சீரியல்களையும் நிறுத்திவிட்டு பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் ஜீ தமிழின் ஹிட் சீரியலான செம்பருத்தியில் இருந்து நாயகன் கார்த்திக் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதில் புதிய நபர் சேர்க்கப்பட்டார். இப்போது நாயகன் கார்த்திக் மாற்றப்பட உள்ளாராம். அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை அதிகரித்துள்ளதாலும், நிறைய வெப் சீரீஸ்களில் நடிக்கும் வாய்ப்புகள் வருவதாலும் அவரும் விலக தயாராக உள்ளாராம். ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே நேரம் புதிய நாயகனாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதிலும் தெளிவு இல்லை.
