இவரது செயல்களுக்குச் சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் இவருக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நித்தியானந்தாவிடம், சின்மயி மற்றும் அவரது தயார் இருவரும் பிரசாதம் வாங்குவது போன்ற புகைப்படம் வைரலானது. இதனைப் பார்த்ததும், பாலியல் குற்றங்களுக்குக் குரல் கொடுத்துவிட்டு, நித்தியானந்தாவிடம் பிரசாதம் வாங்குவதா எனப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.