தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, அரசு போக்குவரத் துறை சார்பில் 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
பொது மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு மற்றும் கே.கே.நகர் ஆகிய 5 இடங்களில் இயங்கும் இந்த சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு, பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக மாநகர போக்குவரத்துக் கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்று முதல் 26ம் தேதி வரை 4 ஆயிரத்து 265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.