हिंदीEnglishதமிழ்മലയാളം
விளையாட்டு
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து இவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடலூரை சேர்ந்த இளவேனில் வாலறிவன் , இதற்க்கு முன் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீரங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து இவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், இதற்கு முன் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை படைத்த மூன்றாவது இந்தியர் என்ற புகழும் இளவேனிலுக்கு கிடைத்துள்ளது.

Related Stories
ஒரு பக்கம் உலகக்கோப்பையை இழந்தாலும், மறுபக்கம் இந்தியாவுக்கு தங்கம்!
11 நாட்களுக்குள் 3 தங்கப் பதக்கங்கள் - இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்த ஹிமா தாஸ்
10 மாத குழந்தையுடன் தங்கம் வென்ற அலிசன் பெலிக்ஸ் - உசேன் போல்ட் சாதனை முறியடிப்பு
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றார் மஞ்சு ராணி