உபர் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் இந்த பெண்ணின் பெயர் வள்ளியம்மா. இவருக்கு வயது 37 . குடும்பச்சூழல் காரணமாக உணவு டெலிவரி வேலையின் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறார். மேலும், தான் இந்த வேலையை எந்த வித சுமையும் இன்றி மனநிறைவுடன் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். வள்ளியம்மாவின் புகைப்படம் நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது குழந்தையுடன் சென்று கொளுத்தும் வெயிலில் உணவு டெலிவரி செய்யும் பெண்ணுக்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரை சிங்கப்பெண், உழைக்கும் மகளிர் என பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.