வீட்டில் துளசி செடியிருந்தால் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமம்
கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால் படுக்கும் இடத்தைச் சுற்றி ஆங்காங்கே துளசி இலைகளை வைத்துவிடுங்கள். துளசி இருக்கும் இடத்தில் பாம்பு, தேள், கோசு மற்றும் விஷ ஜந்துக்களும் அணுகுவதில்லை.
நம் விட்டு பெரியவர்கள் முன்பெல்லாம் காலையில் துளசி மாடத்தை சுற்றி பூஜை செய்து அதிலிருந்து இரண்டு இலைகளைக் கிள்ளி சொம்பில் இருக்கும் தண்ணீரில் சேர்த்து பிரசாதமாக வழங்குவார்கள். இதை ஆன்மிகமாக இல்லாமல் சற்று அறிவியல் பூர்வமாக சிந்தித்தால், மனிதன் நூறாண்டுக் காலம் வரை நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துளசி அருமருந்தாகும்.
பலன்கள் :
குழந்தைகளுக்கும் சளி பிடிக்காமல் இருக்க, பத்து அல்லது பதினைந்து துளசி இலைகளை பசும்பாலில் காய்ச்சி வடிகட்டி அத்துடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்க சிறந்த நிவாரணமாக இருக்கும். மேலும் பசி உணர்வைத் தூண்டும். இதனால் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.
கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால் படுக்கும் இடத்தைச் சுற்றி ஆங்காங்கே துளசி இலைகளை வைத்துவிடுங்கள். துளசி இருக்கும் இடத்தில் பாம்பு, தேள், கோசு மற்றும் விஷ ஜந்துக்களும் அணுகுவதில்லை.
பேன் தொல்லை இருப்பவர்கள் தினமும் துளசி இலையைக் கூந்தலில் சூடிக் கொள்ளலாம். அல்லது துளசி இலைகளையும் வேப்பிலைகளையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக அரைத்து தலையில் பூசி அரைமணி நேரம் கழித்து கூந்தலை அலசுங்கள். வாரம் ஒருமுறையெனத் தொடர்ந்து 5 வாரங்கள் வரை இவ்வாறு செய்தால் பேன் தொல்லையே இருக்காது.
காதில் குத்தல், குடைச்சல் ஏற்பட்டால் இரண்டு துளி துளசிச் சாற்றைக் காதில் விட்டால் உடனே குணமாகிவிடும். துளசி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து புண் மற்றும் படர் தாமரை இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சீக்கிரம் குணமடையும்.
கொஞ்சம் துளசியை பாலில் கலந்து குடிக்க வாந்தி பேதி உடனடியாக நின்றுவிடும்.
கல்லீரல், மண்ணீரல் தொடர்பான நோய்களைத் தடுக்க தினமும் துளசி தண்ணீரைக் குடித்து வந்தால் போதும். ஆம் நிறைய துளசி இலைகளைப் பறித்து சுத்தமாகக் கழுவி 8 மணி நேரம் நீரில் ஊறவைத்த பிறகு, இலைகளை நன்றாக கசக்கிப் பிழிந்து எடுத்துவிட்டால் அந்த நீர் மருத்துவ குணம் பெற்றுவிடும்.
இரவு தூங்க செல்லும் முன்பு, சுத்தமான சந்தனத்தில், துளசி சாறு சேர்த்து பரு இருக்கும் இடத்தில் தடவி விட்டுப் படுக்கச் செல்ல வேண்டும். இதனால் பருக்கள் குறையும் முகம் பளபளப்பாகும்.
தேங்காய் எண்ணெய்யில் சிறிது துளசி இலைகளைச் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். நன்றாக ஆறின பிறகு அதை தினமும் தலையில் தேய்த்துவரப் பொடுகு தொல்லை நீங்கும்.
காற்றில் உள்ள மாசுவை நீக்குவதோடு, துர்வாசனையும் நீக்குகிறது. சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவுகிறது.
வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைச் சமன்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.
இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு, சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதையும் தடுக்கிறது.
துளசியிலேயே பல வகைகள் உண்டு. அதில் காட்டுத் துளசி பித்தத்தைச் சமன்படுத்துகிறது. இரத்தம் தொடர்பான நோய்கள், அரிப்பு, கிருமி, நஞ்சு ஆகியவற்றைப் போக்கும். அத்துடன் கண் தொடர்பான நோய்களையும் தீர்க்கும்.
கிருஷ்ணதுளசி தொண்டை நோய், இருமல், கப நோய், விஷக்காய்ச்சல், வாத நோய், காது வலி, சிறுநீர் தடை ஆகியவற்றை போக்கும்.
விஷ்வ துளசி குளுமை தன்மை கொண்டது. நீரழிவு மற்றும் பெருவயிறு எனும் நோய்களைத் தணிக்கும்.
