போர்க்களமாகும் மேற்கு வங்கம்... பாஜகவுக்கு சவால் விடும் மம்தா... குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா?
மம்தா சட்டத்தை மதிக்க வேண்டும் இல்லையென்றால் குடியரசுத் தலைவர் அமல்படுத்த வேண்டும் என எச்சரித்திருக்கிறது மத்திய அரசு.
நேற்று இரவு, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு ரெய்டு நடத்த சிபிஐ சென்றது. 40 அதிகாரிகள் கொண்ட அந்தக் குழுவை தடுத்து நிறுத்தியிருக்கிறது, ராஜீவ் குமார் தலைமையிலான கொல்கத்தா போலீஸ். அது மட்டுமில்லாமல் சிபிஐ அதிகாரிகளைக் கைது செய்து, ஜீப்பில் ஏற்றி சிறிது நேரம் கழித்து விடுவித்திருக்கிறது.
i spoke with mamata di tonight and told her we stand shoulder to shoulder with her.
— rahul gandhi (@rahulgandhi) february 3, 2019
the happenings in bengal are a part of the unrelenting attack on india’s institutions by mr modi & the bjp.
the entire opposition will stand together & defeat these fascist forces.
இந்த சிபிஐ ரெய்டை கண்டித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘இந்திய அரசியலமைப்பை காப்போம்’ என்ற முழக்கத்துடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவிலிருந்து நடந்துவரும் மம்தாவின் தர்ணா போராட்டத்திற்கு ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
the independence of every institution has been compromised under this fascist bjp government.
— m.k.stalin (@mkstalin) february 3, 2019
i stand with @mamataofficial didi in her fight to protect the federal structure of this country and to save democracy.#savedemocracy
சாரதா நிதி நிறுவன மேசடி கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த வழக்கை ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது. 2014-ம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக, ராஜீவ் குமார் வசம் நிறைய முக்கிய ஆவணங்கள் இருப்பதாகவும்,வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது அந்த ஆவணங்களை சமர்ப்பிக்காமல் அவரே வைத்துகொண்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு, ராஜீவ் குமார் தரப்பிலிருந்து பதில் ஏதும் இல்லை என்பதால்தான் அவரது வீட்டிற்கு விசாரணைக்கு சென்றதாக சிபிஐ தரப்பில் சொல்லப்படுகிறது. ஒரு போலீஸ் கமிஷனர் வீட்டிற்கு பிடி வாரண்ட் இல்லாமல் எப்படி செல்ல முடியும் என மம்தா கேள்வி எழுப்புகிறார்.
இன்று இந்த பிரச்சனை சமந்தமாக உச்ச நீதிமன்றத்தை அணுகிய சிபிஐ, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் ‘முக்கிய குற்றவாளியாக’ இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் அவர் ஆதாரங்களை அழிக்க முற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகக் கூறியுள்ளது. அவர் அழிக்க முற்பட்டார் என்பதற்கான ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மனுவின் மீதான விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளார்.
பிரதமர் மோடி, பா ஜ க தலைவர் அமித ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரே இந்த ரெய்டுக்கு காரணம் என மம்தா குற்றம் சாட்டியிருக்கிறார். மேற்கு வங்க ஆளுநர் கேஷாரிநாத் திரிபாதியிடம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவரம் கேட்டறிந்துள்ளார்.
the highest levels of the bjp leadership are doing the worst kind of political vendetta. not only are political parties their targets, they are misusing power
— mamata banerjee (@mamataofficial) february 3, 2019
to take control of the police and destroy all institutions. we condemn this 1/2
சமீபத்தில் பாஜக நடத்த இருந்த பொதுக்கூட்டங்களுக்கு மம்தாவின் அரசு அனுமதி மறுத்ததாகவும், விஐபிகளுக்காக ஹெலிபேட் அமைக்க இடம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுத்தியதாகவும் பாஜக குற்றம் சாட்டுகிறது. அது மட்டுமில்லாமல், தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் குறித்த திட்டமிடல் கூட்டத்துக்கு, தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தும் கமிஷனர் ராஜீவ் குமார் அதற்கு வரவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் அடங்கிய குழு, தாங்கள் பிரச்சாரம் செய்ய மம்தா அரசு தடையாக இருப்பதாகப் புகார் மனு அளித்துள்ளது.
president’s rule should be imposed on west bengal to control this ‘rogue’ #tmchhi govt under a corrupt cm mamtabanerjee•this is a constitutional crisis ‘created’ by mamta to shield her corrupt & tainted accomplices
— babul supriyo (@supriyobabul) february 3, 2019
மம்தா சட்டத்துக்கு அடிபணியவில்லை என்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என பாஜக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். தேசிய அளவில் இந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
