இந்தியாவில் கேரளா, கர்நாடகா, அந்தமான், தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு பகுதியில் விளைகின்றது. இருப்பினும் அதிகமாக தயாரிப்பதில் முன்னிலையில் இருப்பது கர்நாடகா.
வெனிலா ஐஸ்கிரீம், வெனிலா கேக்குகள், குக்கீகள் மற்றும் வெனிலா வாசனைத் திரவியங்கள் என இவை அனைத்தும் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியென்றால் வெனிலாவின் சிறப்பான சுவை மற்றும் நறுமணத்திற்கு காரணமான வேனிலின் என்னும் வேதியியல் கலவைக்கு நன்றி சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல உண்மையான வெனிலா பீன்ஸில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட இயற்கை சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்கும் தன்மையுள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தரமான வெனிலா பீன்ஸை உற்பத்தி செய்வதில் மெக்சிகோ, இந்தோனேசியா, இலங்கை, மொரீஷியஸ், மேற்கிந்திய தீவுகள், தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. இருப்பினும் 19-வது நூற்றாண்டு வரையில் மெக்ஸிகோவில் மட்டுமே வெனிலா பீன்ஸ் அதிகளவு விளைந்தது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, அந்தமான், தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு பகுதியில் விளைகின்றது. இருப்பினும் அதிகமாக தயாரிப்பதில் முன்னிலையில் இருப்பது கர்நாடகா.
போர்பன் வெனிலா அல்லது போர்பன்-மடகாஸ்கர் வெனிலா உலகின் விலையுயர்ந்த வெனிலா பீன்ஸாக கருதப்படுகிறது. அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் வெனிலா டஹிடியென்சிஸ் அல்லது வெனிலா பொம்போனா போன்ற பிற வகைகளைவிடவும் மேலானது. வெனிலா பீன்ஸ் எல்லா மாதங்களிலும், எல்லா வகைகளிலும் கிடைக்கும்.
வெனிலாபீன்-ன் சிறந்த வகை எது?
மடகாஸ்கர் வெனிலா- ரிச் மற்றும் கிரீமி உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மெக்சிகன் வெனிலா- அடர்த்தியான, டார்க் & ஸ்மோக்கி போன்ற தோற்றமும் சுவையும் அளிக்க இந்த வகை பயன்படுத்தப்படுகிறது.
இந்தியன் வெனிலா- சாக்லேட் நறுமணம்
இந்தோனேசிய வெனிலா– மிதமான மற்றும் சீரான வாசனையை தரக்கூடியது.
டஹிடியன் வெனிலா- மலர், செர்ரி-சாக்லேட் நறுமணம் கொண்டது.
வெனிலா பீன்ஸை ஒரு பிளாஸ்டிக் பையில் போர்த்தி காற்று புகாத கண்ணாடி அல்லது டப்பர்வேர் பாட்டில்கள் சேமிக்கவும். இதனை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கக்கூடாது. ஏனெனில் தரம் A வெனிலா பீன்ஸில் அதிக ஈரப்பதத்தை ஏற்படுத்தும். சிறந்த நிலையில் சரியாக சேமிக்கப்பட்ட வெனிலா பீன்ஸ் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும். 6-8 மாதங்களுக்குள் நீங்கள் பயன்படுத்த விரும்பும் அளவுகளை மட்டுமே வாங்குவது சிறந்தது.