நண்பர்களுடன் இணைந்து நியூட்டன் பிரபு படம் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் தணிகை நாயகனாக களமிறங்குகிறார்.
கலைஞர் டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றும் தணிகை ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் நியூட்டன் பிரபு இயக்குகிறார். அணி கிரியேஷன்ஸ் சார்பாக நியூட்டன் பிரபுவே இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். சித்தார்த்தா பிரதீப் இசையமைக்க உள்ளார். இவர் மலையாளத் திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார்.விஜே தணிகை ஏற்கனவே ‘குற்றம் 23’, ‘தடம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ‘தொடுப்பி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், நியூட்டன் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் நடிக்க கதாநாயகனாக நடிக்கிறார் தணிகை.
பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஜாக்குவார் தங்கம், ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்துகொண்டனர். நண்பர்களுடன் இணைந்து நியூட்டன் பிரபு தயாரிக்கும் படத்தில் ஹீரோவாகி இருக்கிறார் தணிகை. இந்தப் படம் ரொமாண்டிக் சைக்கோ திரில்லர் வகையைச் சார்ந்தது. நாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லி நடிக்கிறார்.
வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் பிரபல நடிகர்கள் பலர் நடிக்க உள்ளனர். இதற்கு முன்பாக பல படங்களுக்கு துணை மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் நியூட்டன் பிரபு. மேலும் குறும்படங்களையும் இயக்கி உள்ளார். பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பல வருடங்களாக சவுண்ட் இன்ஜினியராகவும் பணியாற்றியிருக்கிறார். அந்த அனுபவத்தைக் கொண்டும், அதனால் இணைந்த நண்பர்களை ஒன்றிணைத்தும் இப்படத்தை தயாரிக்கிறார்.