மதுரை, சென்னை, கோவை, குமரி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. சென்னையில் கனமழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. சென்னையில் கிண்டி, கோடம்பாக்கம், அண்ணாநகர், அடையார், தரமணி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.