உலக அளவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது! இந்தியாவில் 1 கோடியை நெருங்கும் பாதிப்பு!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4 கோடியே 51 லட்சம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் 2.80 லட்சம் பேரும், இந்தியாவில் 1.38 லட்சம் பேரும் கோவில்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ்
கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இப்போது பலமடங்கு வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி பரிசோதனை பல நாடுகளில் முடியும் தருவாயில் உள்ளன. சில நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 6 கோடியே 50 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 15 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4 கோடியே 51 லட்சம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 கோடியே 43 லட்சம் பேரும், இந்தியாவில் 95.56 லட்சம் பேரும், பிரேசிலில் 64 லட்சம் பேரும், ரஷ்யாவில் 23.75 லட்சம் பேரும், பிரான்சில் 22.44 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
